இறைவன் - படம் எப்படி இருக்கு..? - தேறுமா..? - தேறாதா..?

 


படத்தின் பெயர் தான் இறைவன் ஆனால் படத்தில் சைக்கோ திரில்லராக நடித்திருக்கும் ஜெயம் ரவியின் நடிப்பை ரசிகர்கள் ரசித்தார்களா? இவரது நடிப்பால் ரசிகர்கள் கவர்ந்து ஈர்க்கப்பட்டார்களா? என்றால் அது சற்றே கேள்விக்ககூறிய விஷயம் தான். இறைவன் படத்தை என்றென்றும் புன்னகை, மனிதம் போன்ற படங்களை இயக்கிய அகமது இயக்கி இருக்கிறார். 

இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடிக்க நரேன், விஜய லட்சுமி, ராகுல்,போஸ் அழகம்பெருமாள் போன்றோர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜாவின் இசை பட்டையை கிளப்ப எதற்கும் கவலைப்படாத காவல்துறை அதிகாரியாக ஜெயம் ரவியும், நரேனும் நடித்திருக்கிறார்கள்.

கதையின் முக்கிய கருவே சென்னை நகரத்தில் இளம் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலையாளிகள் யார்? இந்த கொலைகளை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிப்பது தான் கதையின் சிறப்பு அம்சம் ஆகும்.

கதையை விறுவிறுப்பாக எடுக்க வேண்டும் என்று இயக்குனர் நினைத்திருக்கிறார். எனினும் இந்த திரைப்படத்தில் மாசாக வரவேண்டிய சீன்களும், வசனங்களும் அவ்வளவு சிறப்பாக இல்லை. காட்சிகளுக்கு ஏற்ப எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். மேலும் திரைக்கதையில் பல குழப்பங்கள் நிலவியுள்ளது. 

அடுத்தடுத்து கொலைகள் நடந்து விடக்கூடாது என்ற பதட்டத்தையோ அடுத்து என்ன நடக்கும் என்ற நிலையையோ இறைவன் ஏற்படுத்தவில்லை. எனவே ஜெயம் ரவியின் தனி ஒருவன் அடங்கமறு போகன் உள்ளிட்ட படங்களின் வெளிப்பாடாகவே இதில் அவர் நடித்திருக்கும் போலீஸ் அதிகாரி நடிப்புள்ளது என்று கூறலாம். 

நயன்தாராவும் ஜெயம் ரவியோடு சில காட்சிகளில் மிகச் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார். மேலும் ஒவ்வொரு காட்சிகளிலும் அவரது வித்தியாசமான நடிப்பு வெளிப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் சுமாரான படமாகத்தான் இறைவன் உள்ளது என கூறலாம். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத படமாக இருப்பதால் ரசிகர்களின் மத்தியில் இது எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post