தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக நடிகையாக வலம் வரும் வாணி போஜன் அடிக்கடி சர்ச்சைகளில் சேர்க்கும் சத்தை நாயகி என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்த பிரபலமான வாணி போஜன் சின்ன நயன்தாரா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த ஒ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
இந்தத் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. அந்த வகையில் இவர் சசிகுமாரின் பகைவனுக்கு அருள்வாய், விக்ரம் பிரபு ஜோடியாக பாயும் புலி நீ எனக்கு, கவின் உடன் ஊர் குருவி போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
இதைத் தவிர மேலும் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி மாடன் உடையிலும் புடவையிலும் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் இவர் தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த பில்லா திரைப்படத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் எந்த கெட்டப்பில் இருந்தாலும் அதே கெட்டப்பை போட்டு புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார்.
இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் தாறுமாறாக ரசிப்பதோடு மற்றும் லைகுகளை போட்டு வருகிறார்கள் இப்போது தான் தெரிந்தது ஏன் இவரை குட்டி நயன்தாரா என்று அனைவரும் பாசத்தோடு அழைக்கிறார்கள் என்று அந்த அளவு இந்த கெட்டப் அவருக்கு பொருந்தியுள்ளது.
Tags
Vani bhojan