என்னோட படுக்கையறை காட்சியை வீட்ல பாத்துட்டு.. ரகசியம் உடைத்த நிவேதா பெத்துராஜ்…!

 





தமிழ் திரைப்பட உலகில் என் மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல், திமிர் பிடித்தவன், சங்கத் தமிழன் போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு என்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 

எனினும் திரைதுறையில் ஒரு நிலையான இடத்தை இவரால் என்னும் பிடிக்க முடியவில்லை என கூறலாம். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களோடு பல படங்களில் நடித்து அங்கும் தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்திருக்கிறார். 

தமிழைப் பொறுத்தவரை 2016 ஆம் ஆண்டு வெளி வந்த "ஒரு நாள் கூத்து" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர்-தான் இந்த நிவேதிதா பெத்துராஜ். Instagram பக்கத்தில் தினுசு, தினுசாக உடைகளை அணிந்து போட்டோ சூட் எடுத்து அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். 

எனவே இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. அண்மையில் இவர் ஒரு பேட்டி ஒன்றில் கூறிய கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், திரைத்துறை மத்தியிலும் பேசும் பொருளாகிவிட்டது என கூறலாம். 

பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வியானது கிளாமர் காட்சிகளில் நடிப்பதை குறித்தது தான். அதற்காக அவர் பதில் அளிக்கையில் நான் ஹோம்லி கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்தேன். அந்த சமயத்தில் தெலுங்கில் ஒரு படத்தில் மட்டும் கிளாமராக நடித்தேன். 

அதுவும் கம்போர்ட் zone ல் இருந்து கொஞ்சம் தள்ளி அந்த படத்தில் நடித்திருந்தேன். இதை பார்த்துவிட்டு என் வீட்டார் எதுவும் கூறவில்லை. அவர்கள் என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்பதால் புரிந்து கொண்டார்கள். 

எனினும் படு கவர்ச்சியான படங்களில் நடிக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில் என் படத்தை பார்க்கும் என் அம்மாவும், அப்பாவும் முகம் சுளிக்க க்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என நிவேதா பெத்தராஜ் கூறியிருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post