ஏகே 63 படத்தை இயக்கும் இயக்குனர் யார் தெரியுமா? - தெரிந்தால் மெர்சல் ஆகி போவீர்கள்..

 


தல அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துக் கொடுத்த பிறகு ஏகே 63 படத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த ஏகே 63 படத்தை இயக்கக்கூடிய அதிர்ஷ்டசாலியான இயக்குனர் யார்? என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

இது வரை அஜித் நடித்த படங்களை இயக்கிய இயக்குனர்களின் வயது அதிகபட்சமாக இருக்கும். ஆனால் இந்த ஏகே 63 படத்தை இயக்கக்கூடிய இயக்குனர் சிறு வயதை சேர்ந்தவர். இந்த இயக்குனரை அஜித்தின் மேனேஜர்களான சுரேஷ் சந்திரா மற்றும் எல்ரெட் குமார் இருவரும் அவருக்கு பக்குவமாக தேர்வு செய்து ஒரு புதிய ரூட்டை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். 

இந்த இளம் இயக்குனர் மீது அதிக அளவு நம்பிக்கையை அஜித் வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. இதனை அடுத்து இந்த புதிய இயக்குனரின் கூட்டணிகள் தான் தல அஜித்தின் 63 வது படம் வெளி வருவது உறுதியாக விட்டது. 

மேலும் இந்த படத்தை எல்ரெட்குமார் தான் தயாரிக்க இருக்கிறார். அஜித்தும் மிக நீண்ட நாட்களாகவே டைம் டிராவல் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவில் இருந்திருக்கிறார். எனவே இந்த கதையை பொறுத்தவரை அதில் கை தேர்ந்தவர் ஆக இந்த இயக்குனர் இருக்கிறார். 

எனவே தான் ஏகே 63 க்கு இந்த இயக்குனரை தேர்வு செய்து இருக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் இந்த இயக்குனரை தேர்வு செய்வதற்கு காரணம் சமீபத்தில் இவரின் இயக்கத்தில் வெளிவந்த "மார்க் ஆண்டனி" படம் ரசிகர்களின் மத்தியில் மிக நல்ல வரவேற்பு பெற்றதோடு சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அஜித்துக்கு இந்த இளம் இயக்குனரின் மீது அதீத நம்பிக்கை ஏற்பட்டு உள்ளதாம். 

எனவே தான் தற்போது இந்த இயக்குனரின் கூட்டணி உறுதியாக உள்ளது. மேலும் இவரை பற்றி நல்ல அபிப்பிராயம் மற்றும் திறமையை இவரது நண்பர் எஸ்ஜே சூர்யாவும் எடுத்துக் கூறியிருக்கிறார்.

இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் யார் அந்த அதிர்ஷ்டசாலி இயக்குனர் என்று. ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். இவர் ஆதிக் ரவிச்சந்திரன். எனவே ஆதித் ரவிச்சந்திரன் நிச்சயமாக அஜித் நினைப்பது போல ஒரு மிகச்சிறந்த டைம் டிராவல்ஸ் ஸ்கிரிப்ட் உடன் ஏகே 63 படத்தில் தரமான சம்பவத்தை செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post