பிக்பாஸ் 7 பவா செல்லத்துரை வாங்கிய சம்பளம் என்ன? - விவரங்கள் உள்ளே..

 

விஜய் டிவியில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களின் மிகவும் பிரமாண்டமான ஷோவாக கருதப்படுவது பிக் பாஸ் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த ஷோவை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 

தற்போது மிக பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 மொத்தம் 18 பேர்களோடு துவங்கி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி முதல் வாரமே சூடு பிடிக்க ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல், சர்ச்சைகளும், சண்டைகளும், கலை கட்டியது. 

மேலும் அந்த வாரத்தில் இறுதியில் மக்கள் அளித்த வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு அனன்யா ராவ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

இதனை அடுத்து திடீர் திருப்பமாக எழுத்தாளர் பாவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார் என்ற தகவல் தீயாய் பரவியது. இதற்கு காரணம் என்ன? எதனால் இந்த ஷோவில் இருந்து வெளியேறுகிறார் என்று பல்வேறு வகையான கேள்விகள் எழுந்தது.

இந்நிலையில் எழுத்தாளர் பாவா செல்லதுரை தனது உடல்நிலை பிரச்சனைகளின் காரணமாக தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்ததை அடுத்து பல்வேறு வகையான கருத்துக்கள் கிளம்பியது. 

மேலும் இந்த சீசனில் அவர் கூறிய சின்ன, சின்ன கதைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என நம்பலாம். ஒரே வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் பாதியிலேயே வெளியேற உள்ளது. ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் பாவா செல்லத்துரை அவர்கள் பிக் பாஸில் கலந்து கொண்ட இந்த ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று பலரும் நினைக்கக்கூடிய நேரத்தில் ஒரு வாரத்துக்கு ரூ. 1 முதல் 2 லட்சம் வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. 

மேலும் ஒரு வாரம் மட்டுமே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு ரெண்டு லட்சம் சம்பளம் கொடுக்கப்படலாம் என்ற பேச்சுக்களும் இப்போது பரவலாக காணப்படுகிறது. இதனை அடுத்து அவர் போட்டியிலிருந்து விலகுவது உறுதியாகிவிட்டது என கூறலாம்.

Post a Comment

Previous Post Next Post