பொழைக்க தெரிந்த புள்ள தான்.. சைடு பிஸ்னஸில் இறங்கி அடிக்கும் பிரியங்கா நல்காரி..

 


சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலில் நாயகியாக நடித்த பிரியங்கா நல்காரிக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது முடிந்தது. 

ஏற்கனவே ரோஜா சீரியல் மூலம் மக்களின் மனம் கவர்ந்த தேவதையாக மாறிய, இவரை ரோஜா என்று பெயர் சொல்லியே அனைவரும் அழைத்தார்கள். இதனை அடுத்து இவர் சீதாராமன் என்ற சீரியலில் நடித்திருந்தார். 

ஆனால் திடீரென்று விலகி சீரியலில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இதனைத் தொடர்ந்து சில மாதங்கள் கழித்த பிறகு ஜீ தமிழில் நளதமயந்தி என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய மகிழ்ச்சிகரமான செய்தியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள். 

மேலும் இதுபோல பல பிசினஸில் ஈடுபட வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள். இவர் சின்னத்திரையில் நடிப்பதோடு நின்று விடாமல் நடிகை பிரியங்கா முதல் முறையாக ரெஸ்டாரன்ட் ஒன்றை தனது திருமணத்திற்கு பிறகு ஆரம்பித்து இருக்கிறார். 

இந்த ரெஸ்டாரன்ட் பிசினஸ் நல்லபடியாக போக வேண்டும் என்று அவர்கள் ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள். ஏற்கனவே குடும்ப பொறுப்பை மிகச் சிறப்பான முறையில் திருமணத்திற்கு முன்பே கவனித்துக் கொண்ட பிரியங்கா தான் நடித்து அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு தன்னுடைய படிப்பையும் தன்னுடைய சகோதரிகளின் படிப்பையும் திறம்பட நிர்வாகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரது வருவாயை நம்பியே அவரது குடும்பம் இருந்தது என்று சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் இவர் கல்லூரியில் படிக்கும் போது இவரை பார்த்து பலரும் உருவ கேலி செய்திருக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர் தனது திறமையால் எந்த அளவு முன்னேறி இருப்பது சந்தோஷமாக இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 

எனவே இன்றைய சூழ்நிலையில் ஒரு தொழில் செய்தால் பத்தாது பல தொழில்கள் பார்த்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்பதற்கு முன் உதாரணமாக பிரியங்கா மட்டுமல்லாமல் பெரிய திரை நடிகையான நயன்தாராவும் விளங்குகிறார் என கூறலாம்.

Post a Comment

Previous Post Next Post