திரிஷா இல்லைனா என்ன? நான் இருக்கேன் விஜய் - ஓடி வந்த கீர்த்தி சுரேஷ்.. அட இதுக்குத்தானா?

 

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் லியோ படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் சக்கை போடும் போடுகிறதா? அல்லது பரவாயில்லையா? என்று கூறும் படி உள்ளதா? என்று பட்டிமன்றம் போட்டு ரசிகர்கள் பேசி வருகிறார்கள். 

அந்த வகையில் நேற்று வெளிவந்த இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு பலரும் பல வகைகளில் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் விஜய், திரிஷா நடிப்பு மக்கள் மத்தியில் பெரியளவு பேசப்பட்டுள்ளது. 

மேலும் லோகேஷ் கனகராஜ் கூறியது போல படத்தின் பின்பகுதி விறுவிறுப்பாக உள்ளதாக பலரும் தெரிவித்திருக்கிறார்கள். இதை அடுத்து இந்த படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் படத்தைப் பார்க்க நான், நீ என்று ரசிகர்கள் போட்டி போடுவதை போல சினிமா நட்சத்திரங்களும் போட்டி போட்டு தியேட்டருக்கு சென்று பார்த்து வருகிறார்கள். 

 அந்த வகையில் வெற்றி தியேட்டரில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் சென்று திரைப்படத்தை பார்த்திருக்கிறார்கள். விஜயின் தீவிர ரசிகரான கீர்த்தி சுரேஷ் லியோ படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்காக ஓடோடி வந்திருக்கின்ற செய்தியை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து விட்டார்கள். 

 விஜய் உடன் இணைந்து நடித்த திரிஷாவால் இந்த படத்தின் முதல் காட்சியை பார்க்க முடியவில்லை. இதற்கு காரணம் திரிஷா தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இருப்பதால் சென்னை பல குழுவோடு இணைந்து படத்தை பார்க்க முடியவில்லை என்ற வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post