அது அப்பவே நடந்திடுச்சு..! - உண்மையை உளறி கொட்டிய விருமாண்டி அபிராமி.!.

 


தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் சிறப்பாக பல முன்னணி நடிகர்களோடு சிறப்பாக நடித்து தொண்ணூறுகளில் மிகச் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகை அபிராமி. 

இவர் பிரபு, கமல் அர்ஜுன் உள்ளிட்ட பல நடிகர்களோடு நடித்திருந்தாலும் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி கேரக்டரை பக்காவாக செய்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார். 

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்ந்தது. அந்த படங்களில் நடித்த இவர் சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். அதனை அடுத்து அமெரிக்காவில் இருக்கும் மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து கொண்டு பிள்ளை, குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.

 இந்த நிலையில் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்க கூடிய நடிகை அபிராமி சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்ததோடு அதில் சில கருத்துக்களை ஓபன் ஆக கூறி இருக்கிறார். அந்த நிருபர் இவரிடம் வித்தியாசமான கேள்விகளை கேட்டிருக்கிறார். 

அதில் ஒன்று முதலாவதாக உங்களுக்கு முத்தம் கொடுத்தது யார்? என்று கேட்க வழக்கமாக அம்மா என்ற பதிலை அவர் மிகச் சிறப்பாக சொல்லிவிட்டார். இதனை அடுத்து நீங்கள் எதிர்பார்ப்பது போல் அந்த முத்தம் என்னுடைய 15 மற்றும் 16 வயதில் நடந்து விட்டது என்று உண்மையைப் போட்டு உடைத்து விட்டார். 

இதை அடுத்து தவளை தன் வாயால் கெடும் என்பது போல தனது 15 வயதில் நடந்த நிகழ்வை தற்போது நடிகை அபிராமி வெளிப்படுத்தியதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் இவரது நடிப்பால் கவரப்பட்டு இருக்கும் ரசிகர்கள் இன்னும் பல படங்களில் இவர் நடிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள். 

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் படித்து விட்டு உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்து வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது மேலான ஆதரவை கொடுங்கள்.

Post a Comment

Previous Post Next Post