"எல்லாமே பச்சை பச்சையா தெரியுது மச்சி..!" - இளசுகளை கதற விடும் வாணி போஜன்..!

 


வாணி போஜன் 28, அக்டோபர் 1988 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மலைவாழ் தளமான ஊட்டியில் ஒரு படுகர் இனத்தில் பிறந்தவர். ஊட்டியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் படிப்பை முடித்து அரசு கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இவர் சின்னத்திரையில் சக்கை போடு போட்ட சீரியல் நடிகையாக திகழ்ந்தவர் தான் வாணி போஜன். இவர் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் சீரியலானது டிஆர்பி ரேட்டை எகிர வைக்கக் கூடிய வகையில் சன் டிவியில் பர்பாமன்ஸ் செய்தது. 

அதுபோலவே ஜீ தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த லட்சுமி வந்தாச்சு தொடரானது குடும்பப் பெண்களின் மத்தியில் பேசப்படக்கூடிய சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்தது. இவரது சிறப்பான நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சின்னத்திரையின் நயன்தாரா என்று அன்போடு அழைத்து வந்தார்கள்.

இதனை அடுத்து இவருக்கு பெரிய திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்த இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அந்த வாய்ப்பினை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

எனவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள் என கூறலாம். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பிஸியாக இருக்கும் இவர் வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார். திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கக் கூடிய இவர் அண்மையில் வெக்கேஷன்காக இந்தோனேசியா சென்றிருக்கிறார். 




அங்கு பாலி தீவில் சில புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். திரைப்படங்களில் நடிக்கக்கூடிய சமயத்தில் லிவ்விங் டுகதர் முறையில் ஜெய் நடிகரோடு இவர் வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் கேரியரில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். 

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஸ்டன்னிங் ஆகி விட்டார்கள். இந்தப் புகைப்படத்தில் பச்சை நிற ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டை போட்டு அந்த நிறத்துக்கு மேட்ச் ஆகும்படி பச்சை சேலையை உடுத்தி பக்காவாக போஸ் தந்திருக்கிறார். 

இதனைப் பார்த்து தடுமாறி வரும் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தில் இவர் படுமாஸாக இருக்கிறார் என்று கூறியதோடு புகைப்படத்திற்கு தேவையான கமாண்டுகளை போட்டு அவரை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். 

பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை ஊட்டும் பச்சை நிறமே என்ற பாடல் வரிகளை பாடி அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். மேனி அழகை எடுப்பாக எடுத்துக்காட்ட கூடிய இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தில் ஆழமாக பதிந்து விட்டது.

Post a Comment

Previous Post Next Post