"சினிமா தான் ஒர்க் அவுட் ஆகல..!" - அதனால தான் ராதா மகள் கார்த்திகா நாயர் இந்த முடிவுக்கு வந்தாங்களா?..

 

தமிழ் திரை உலகில் எண்பது கால கட்டங்களில் சினிமாவில் தன்னை அசைக்க முடியாத கதாநாயகியாக நிலை நிறுத்திய ராதா பற்றி அதிக அளவு உங்களிடம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. 

முதல் மரியாதை படத்தில் சிவாஜியோடு நடித்து பிளவுஸ் போடாமல் தனது நடிப்புத் திறனை பக்காவாக வெளிப்படுத்திய இவருக்கு ஏராளமான ரசிகர் படை அன்றே இருந்தது என்ற அது மிகையல்ல. 

 சினிமா சகாப்தம் நிறைவடைந்த பிறகு இவர் திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் தற்போது இவரது மூத்த மகள் கார்த்திகா நாயர் கோ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். 


எனினும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு புதிய படங்கள் வந்து சேரவில்லை. எனவே சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில் தற்போது கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வருங்கால கணவருடன் பார்த்துதான் கார்த்திகா நாயர் எடுத்திருக்கும் போட்டோவை தற்போது instagram-ல் பதிவிட்டு வைரல் ஆக்கிவிட்டால் எந்த போட்டோவை அனைவரும் பார்த்து வருகிறார்கள். 

சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் திருமணத்தில் இறங்கிவிட்டார் என்று பல்வேறு கருத்துக்கள் வெளிவந்தாலும், தற்போது இவர் எடுத்திருக்கும் முடிவு சிறப்பான முடிவு என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் பலரும் வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.


Post a Comment

Previous Post Next Post