13 வயதில் பம்பர சீனில் அட்ஜஸ்ட் செய்தே நடித்தேன்..! - நடிகை சுகன்யா ஓப்பன் டாக்..!

 


இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகைகளில் சுகன்யாவும் ஒருவர். இவர் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். 

இதனை அடுத்து சக்ஸஸ்ஃபுல் நடிகையாக மாறிய சுகன்யா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்திருக்கிறார். மேலும் இவர் 2002 ஆம் ஆண்டு பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து பெற்று தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.இவர் நடிப்பதோடு நின்று விடாமல் அரசியலிலும் கவனத்தை செலுத்தி வரும் இவர் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்ததாகவும் அதனால் தான் தன் பாதி வாழ்க்கை வீணாகிவிட்டது என்றும் கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து அண்மையில் பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கக்கூடிய இவர் 1992 ஆம் ஆண்டு வெளி வந்த சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். 

அந்த வகையில் அந்தப் படத்தில் இவர் நடிக்க ஒப்புக்கொண்ட இப்போது இவருக்கு 13 வயது தான் ஆகி இருந்தது.மேலும் படத்தை நடித்து முடித்த பின்பு தான் தான் அது கதாநாயகி என்ற விஷயம் தனக்கு தெரிய வந்தது. 

அதிலும் குறிப்பாக விஜயகாந்த் என் தொப்புளில் பம்பரம் விடும் காட்சியில் நடிக்க பல முறை ரிகல்சல் செய்தேன். எனக்கு மூன்று அசிஸ்டன்ட் பம்பர ரிகர்சலுக்காக இருந்தார்கள். எனவே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அந்த சீன் என்றும் நான் பண்ணவே மாட்டேன் என்று பலமுறை சொல்லியும் என்னை நடிக்க வைத்தார்கள். 

ஒரு சில விஷயங்களுக்காக நடிகைகள் அட்ஜஸ்ட் செய்து ஆக வேண்டும் என்று அனு ஹாசன் கூறியதை உதாரணமாக தெரிவித்திருக்கிறார். மேலும் அதுபோன்ற காட்சிகள் நடிக்கும் போது கூச்சமாக ஒரு மாதிரி இருந்ததாகவும், அந்த காட்சியில் பெரிதாக ஆபாசம் இல்லாமல் அனைவரும் ரசிக்கும் படியாக இருந்ததாக இயக்குனர் ஆர்பி உதயகுமார் கருத்தினை தெரிவித்து கூறினார். 

இதனை அடுத்து பல படங்கள் வந்து சேர்ந்ததாகவும், அந்த படத்தில் தான் மிக நேர்த்தியான முறையில் நடித்ததாகவும் நடிகை சுகன்யா கூறியிருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post