"6-ஆண்டுகளுக்குப் பின் அசத்தலான கம்பேக்..!" - சிவனாண்டி மகள் ஸ்ரீ திவ்யா லேட்டஸ்ட் போஸ்..!




ஸ்ரீதிவ்யா இத்தனை நாட்கள் எங்கு சென்றார் என்று ரசிகர்கள் தேடிக்கொண்டு இருந்த போது வந்து விட்டேன் என்று சொல்லு என ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலகப் பிரவேசத்தை செய்து இருக்கிறார்.

ஸ்ரீதிவ்யா விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ரெய்டு படத்தில் தற்போது நடித்து ரசிகர்களின் மனதில் மீண்டும் இடம் பிடித்தவர். அதுமட்டுமல்லாமல் இவர் பொன்ராம் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளி வந்த சூப்பர் டூப்பர் ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்க படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

மேலும் இந்த படத்தில் இவர் சத்தியராஜ்க்கு மகளாக லதா பாண்டி என்ற கேரக்டரில் நடித்து தனது துரு, துரு நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதனை அடுத்து இவர் சுசீந்திரன் இயக்கிய திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். 

இந்த படமும் ஹிட்டானதை அடுத்து ரசிகர்கள் இவர்களை கொண்டாடினார்கள். அடுத்தடுத்து முக்கிய நடிகர்களோடு நடிக்கக்கூடிய வாய்ப்பும் வந்து சேர்ந்தது. அந்த வகையில் பிரபுவின் மகனான விக்ரம் பிரபுவுக்கு வெள்ளைக்கார துரை திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். 


அதில் அம்மாடி உன் அழகு செம தூள் என்ற பாடலுக்கு அருமையான குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறினார். இதனை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனோடு ஜோடி போட்டு காக்கி சட்டை படத்தில் இவர் நடித்திருக்கிறார். 

அதன் பிறகு இவர் ஈட்டி, ராணா டகுபதிக்கு ஜோடியாக பெங்களூரு நாட்கள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஜிவி பிரகாஷ் உடன் பென்சில் விஷாலுக்கு ஜோடியாக மருது, விஷ்ணு விஷாலுடன் மாவீரன் கிட்டு என ஓராண்டில் பல படங்களில் செம பிசியாக நடித்த நடிகையாக ஸ்ரீ திவ்யா மாறினார். 

சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு திரையுலகில் சரியாக வாய்ப்புகள் அமையவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் இல்லாமல் தவிர்த்த இவர் ரெய்டு படத்தின் மூலம் தற்போது கம் பேக் கொடுத்திருக்கிறார். 

இந்த படம் தீபாவளி பண்டிகை என்று வெளிவர உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதிவ்யா புடவையில் அசத்தியிருக்கிறார். தற்போது அந்த புடவையை எடுத்துக் கொண்ட போட்டோ ஷூட் தான் சோசியல் மீடியாவில் படு வைரலாக மாறி வருகிறது. 

இந்த புகைப்படத்தில் இவர் அழகாக தேவதை போல் காட்சி தருவதாக ரசிகர்கள் கமெண்டில் கூறி இருக்கிறார்கள். நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலை என்ன என்பது தெரிய வரும் நிச்சயமாக இந்த புகைப்படம் உங்கள் மனதிலும் இடம் பிடிக்கும்.

Post a Comment

Previous Post Next Post