ஹீரோயின்களை தளபதி விஜய் இப்படி தான் செலக்ட் பண்ணுவார்..! - பிரபல நடிகர் போட்டு உடைத்த உண்மை..!

 

நடிகரும் பிரபல சினிமா விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதன் சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கங்களையும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அறிந்திராத விஷயங்களை பேசி பிரபலமானவர். 

சினிமா நடிகைகள் மட்டுமல்லாமல் துணை கதாபாத்திரங்களாக நடிக்க கூடிய நடிகர்கள் மற்றும் நடிகைகளின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை வெளிப்படையாக கூறி பிரபலமாகிவிடுவார். 

இந்த சூழ்நிலையில் விஜயசேதுபதியுடன் கிசுகிசுக்கப்பட்ட ஒரே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்றும் விஜய் சேதுபதியின் சிபாரிசால் தான் இவர் அடுத்தடுத்த படங்களில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனை விஜய சேதுபதியே மேடையில் ஒப்புக்கொண்டதாக கூறியதை அடுத்து அவரது குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. 

மேலும் விஜய சேதுபதியின் மனைவி விவாகரத்து வரை சென்றதை அடுத்து குடும்பத்தினர் செய்து வைத்த சமாதானம் மூலம் இருவரும் தற்போது சேர்ந்து வாழ்வதாக கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்த பரபரப்பு அடங்கி முடிப்பதற்குள் நடிகர் தளபதி விஜய் பற்றி சில உண்மைகளை புட்டு, புட்டு வைத்திருக்கிறார். 

தளபதி விஜய் தன்னுடைய படங்களில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகைகளை இப்படித்தான் தேர்வு செய்திருக்கிறார் என்ற தகவலை பகிர்ந்தார். விஜயின் மனைவி சங்கீதா யாரை நடிக்கச் சொல்கிறாரோ, அவரோடு தான் விஜய் ஜோடியாக நடிப்பார் அப்படி இவர்கள் இருவருக்குள் ஓர் அண்டர் ஸ்டாண்டிங் இருந்ததால் வாழ்க்கை சிறப்பாக சென்றது. 

ஆனால் சில காலமாக இந்த முடிவு அனைத்தையும் தளபதி விஜய் எடுத்து வருவதால் இவருக்கும் இவரது மனைவி சங்கீதா விற்கும் பிரச்சனை ஏற்பட்டு தனித்தனியாக இருந்து வருவதாக ஒரு மிகப்பெரிய குண்டை பயில்வான் ரங்கநாதன் போட்டு விட்டார். 

இதனை அடுத்து இப்படி எல்லாம் நடந்து இருக்குமா? இதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்று பலரும் இந்த பிரச்சனையைப் பற்றி விமர்சித்து வருவதால் பேசும் பொருளாகிவிட்டது. உங்களுக்கும் இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது லைக் கொடுத்து ஆதரவை கொடுங்கள்.

Post a Comment

Previous Post Next Post