"கவுண்டமணி - பிக்பாஸ் விசித்ரா இடையே அப்படி ஒரு தகறாரா…?" - சிவாஜி வீட்டில் நடந்த கட்டப்பஞ்சாயத்து..!

 


80 மற்றும் 90களில் சில்க் ஸ்மிதாவை மிஞ்ச கூடிய அளவு கிளாமரான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் விசித்ரா. இவர் தற்போது பிக் பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்று கலக்கி வருகிறார். 

விசித்ரா ஐட்டம் பாடலுக்கு ஆடுகின்ற ஆட்டத்தை பார்ப்பதற்கு என்று தனியாக ஒரு ரசிகர்கள் படை இருந்தது. இவர்கள் ஐட்டம் பாடல்கள் ஆடுவதோடு மட்டுமல்லாமல், துணை நடிகையாக பல படங்களில் நடித்து அபார திறமையை வெளிப்படுத்தியவர். 

அந்த வகையில் இவர் காமெடி நடிகர் கவுண்டமணியோடு ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக டைட்டானிக் பட காமெடியில் கவுண்டமணியோடு சேர்ந்து விசித்ரா செய்த காமெடிகள் ரசிக்கும் படியாக இருந்தது. 

இதனால் பட வாய்ப்புகள் விசித்திராவை தேடி வந்தது. மிகப்பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ரஜினி, கார்த்திக், பிரபு போன்றவர்களின் படங்களில் விசித்ரா கண்டிப்பாக இடம் பிடிக்கக் கூடிய நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில் பெரிய குடும்பம் என்ற திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்க, படத்தின் பூஜையானது சிவாஜி கணேசன் வீட்டில் போடப்பட்டது. அந்த சமயத்தில் கே எஸ் ரவிக்குமார் விசித்ராவை அழைத்து உனக்கும் கவுண்டமணிக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டிருக்கிறார். 

இதனை அடுத்து விசித்ரா அப்படி எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூற, எப்படிப்பட்ட பிரச்சனையானாலும் அதை சரி செய்து விடலாம் நீங்கள் ஏன் கவுண்டமணிக்கு வணக்கம் சொல்லவில்லை என்று கேட்டார். 

அதற்கு விசித்ரா கவுண்டமணிக்கு நான் வணக்கம் சொல்லவில்லையா? எப்போதும் நான் வந்ததும் அனைவருக்கும் வணக்கம் சொல்லுவது தான் என்னுடைய இயல்பு. ஏன் சொல்லாமல் இருந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. 

இதை ஒரு பெரிய பிரச்சனையாக கவுண்டமணி ஆக்கிட்டாரா? என பேசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் நடிக்கும் போதே தன் உண்டு தன் வேலை உண்டு என காரராக இருப்பவர்.மேலும் வேலை முடிந்த உடனே ஸ்பாட்டில் இருந்து கிளம்பி விடுவார். 

எவரிடமும் வெட்டி நியாயம் பேசுவது இவருக்கு பிடிக்காது. எனக்கு அதில் ஈடுபாடும் இல்லை என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து சிவாஜி கணேசன் வீட்டில் இவர்கள் இருவரையும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சமரசம் செய்து வைத்திருக்கிறார். 

இதுதான் அங்கு நடந்த கட்டப்பஞ்சாயத்தின் ரகசியம் இதனை அடுத்து வழக்கம்போல் இருவரும் அவர்கள் பணியை செய்திருக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post