படப்பிடிப்பில் விசித்ரா-வை ரூமுக்கு அழைத்த அந்த முன்ணனி நடிகர் இவரு தானா..? - காரி துப்பும் ரசிகர்கள்..!

 

90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கிளாமரான நடிகையாக பலர் நடித்திருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்க நடிகையாக திகழ்ந்தவர் விசித்ரா. இவர் சினிமாவில் நடிக்கும் போதும் அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிக அளவு இருந்ததாக கூறியதோடு **Bhalevadivi Basu படத்தில் நடிக்கும் பொது நடிகர் பாலையா விசித்ரா-வை படுக்கைக்கு அழைத்தார் என்ற தகவல் உள்ளது . 

மேலும் தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் இவர் சின்ன திரையில் என்ட்ரி ஆகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, பிக் பாஸ் சீசன் 7 தமிழில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். 

இந்த பிக் பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவின் கல்வி குறித்து பேசிய விஷயங்கள் வைரலானது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய விளையாட்டை பார்த்து இவருக்கு வாக்கு வங்கி அதிகரித்தது. 

தற்போது பிக் பாஸ் வீட்டில் அதிக அளவு ஓட்டுக்களை பெற்றிருக்கக் கூடிய விசித்ரா இந்த போட்டியில் இறுதி வரைக்கும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் மறக்க முடியாத சம்பவம் குறித்து பேசும் ஒரு டாஸ்கை வைத்தார்கள். 

இந்த டாஸ்க்கில் விசித்ரா மறக்க முடியாத சம்பவம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அந்தப் பகிர்வு தான் இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது. இதற்குக் காரணம் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த முகம் சுளிக்கக்கூடிய விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். 

அந்த விஷயம் என்ன தெரியுமா? நடிகை விசித்ரா முன்னணி நடிகர் படத்தில் நடித்த ஒப்பந்தமான பொழுது அவர் என் பெயரை கூட கேட்காமல் ரூமுக்கு வர சொன்னார். எனினும் அதைக் கேட்காமல் நான் ஹோட்டலில் நான் தங்கி இருந்த ரூமின் கதவை பூட்டி உறங்கியதை எடுத்து இரவு முழுவதும் அவர் ஆட்களை வைத்து ரூம் கதவை தட்டிய சம்பவத்தை பகிர்ந்தது உள்ளார். 

இந்த நிகழ்வு எனக்கு கடுமையான அதிர்ச்சியை தந்தது. மேலும் அந்த ஹோட்டலில் என் கணவர் தான் ஹோட்டலின் மேனேஜராக இருந்ததால் என்னை பாதுகாத்தார். இதனை அடுத்து ஒவ்வொரு நாளும் ஒரு ரூம் கொடுப்பார். 

இது குறித்து நான் யூனியனில் புகார் கொடுத்த போது இதை விட்டு விட்டு வேற வேலையை பார் என்று கூறினார்கள்.அதற்கு உரிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் தான் நடிப்புத் தொழிலை வேண்டாம் என்று நான் வெளியேறி விட்டேன். இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் இந்த கருத்தினை தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post