ரகசிய காதலில் விஜய் சேதுபதி..! - விஷயம் தெரிந்து மனைவி எடுத்த அதிரடி முடிவு..!

 

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்-க்கு பிறகு மக்கள் செல்வன் என்ற அடைமொழியோடு தனது நடிப்புத் திறனால் அனைவரையும் கவர்ந்த நடிகர் விஜயசேதுபதி. இவர் ஹீரோ ரோல் மட்டுமல்லாமல் வில்லன், இளைஞர், முதியவர் என்று பலவித கேரக்டர் ரோல்களை பக்காவாக செய்யக்கூடிய திறன் படைத்தவர்.
 
ஆரம்ப காலத்தில் திரை உலக வாழ்க்கையில் விஜய் சேதுபதிக்கு அடுக்கடுக்கான கஷ்டங்கள் வந்திருந்தாலும், அவர் தன் திறமையை நம்பியதின் காரணத்தால் இன்று உச்சகட்ட நடிகராக உயர்ந்து விட்டார். இவர் தென் மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். 

எனினும் பீட்சா படத்தின் மூலம் தான் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வகையில் இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச் சிவந்த வானம் போன்ற பல படங்களில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி தனக்கு என்ற ஒரு ரசிகர் படையை உருவாக்கிக் கொண்டார். 

இதுவரை எந்த ஒரு நடிகையோடும் கிசுகிசுக்கப்படாத விஜய் சேதுபதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் தற்போது இணைத்து பேசப்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ரம்மி தர்மதுரை கா.பெ ரண சிங்கம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நெருக்கமாக சேர்ந்து நடித்து இருந்தார்கள். 

இதற்கு காரணம் இவரது ரகசிய உறவு என்று தற்போது கூறுகிறார்கள். இதனை அடுத்து இந்த ரகசிய உறவு விஜய் சேதுபதி மனைவி ஜெர்சிக்கு தெரிய வர குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை வெடித்து விவாகரத்து வரை சென்று விட்டார்களாம். 

இந்த சூழ்நிலையில் விஜயசேதுபதி தன் மனைவியிடம் சத்திய வாக்கு ஒன்றினை கொடுத்ததின் காரணமாக மனைவி சமாதானம் ஆகி இருவரும் சேர்ந்து வாழ்வதாக பிரபல பத்திரிக்கையாளர் ரங்கநாதன் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் பேட்டி ஒன்றில் விஜயசேதுபதியிடம் இது பற்றி கேள்வி எழுப்பிய போது இருவரும் பல படங்களில் சேர்ந்து நடித்தது உண்மைதான். இதன் மூலம் குடும்பத்தில் சந்தேகம் ஏற்பட்டு குழப்பம் வந்துவிட்டது என விஜய் சேதுபதியே கூறியிருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post