“காதுக்கு வந்த மகனின் காதல் விவகாரம்..” - திடீர் ட்விஸ்ட் அடித்த பாரதிராஜா..!

 

இயக்குனர் இமயம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் பாரதிராஜா பல படங்களில் கிராமத்து மண்வாசனையை வெளிப்படுத்தக் கூடிய திரைப்படங்களை வெளியிடுவதில் கில்லாடி என கூறலாம். இவர் தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை தாஜ்மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு கதாநாயகனாக அறிமுகம் செய்தார். 

தந்தையின் இயக்கத்தில் முதல் படமே இவருக்கு ஹிட் கொடுக்க அடுத்தடுத்து படங்கள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் மனோஜ் சமுத்திரம், கடல் பூக்கள், பல்லவன், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இதை அடுத்து சரியாக பட வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. 

மேலும் இவர் 2005 இல் வெளிவந்த சாதுரியம் என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நந்தனாவை காதலித்திருக்கிறார். மேலும் சாதுரியன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயினி இவர் தான் என்ற அறிமுகம் ஆன பொழுது நந்தனாவை பார்த்த முதல் ஸ்பாட்டிலேயே மனோஜ்க்கு காதல் ஏற்பட்டு விட்டதாம். 

இந்நிலையில் திரைப்பட சூட்டிங் - இன் போது ஒரு காட்சியில் அவர் தோள்பட்டையை பிடிக்க வேண்டும். ஆனால் என்னால் அப்படி செய்ய முடியாமல் அந்த காட்சியை மட்டும் ஏழு டேக்குகள் எடுத்து செய்தேன். இதனை அடுத்து பாண்டிச்சேரியில் பாடல் காட்சியை முடித்து விட்டு பேக்கப் செய்யும் போது நந்தனா கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. 

அப்போது தான் எனக்குத் தெரிந்தது அவர் என்னை காதலிக்கிறார் என்று. இதனை அடுத்து மெசேஜ் செய்து பேச ஆரம்பித்தேன். ஒருநாள் எனக்கு அவர் போன் செய்து உனக்கு போன் பண்ண தோன்றவில்லையா? என்று கேட்டார் இதன் பிறகு நான் ஓப்பனாக என் காதலை தெரிவித்து விட்டேன். 

இந்த காதல் விஷயம் எப்படியோ அவரது அப்பாவின் காதுக்கு சென்றுள்ளது. எனினும் ஆரம்பத்தில் இவர்கள் காதலை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் காதல் விஷயத்தில் பாரதிராஜாவும் ஒரு யதார்த்தமான தந்தையாகவே இருந்து எதிர்ப்பை தெரிவித்தார். 

இதனை அடுத்து என் பெரியப்பா அப்பாவிற்கு கால் செய்து இந்த பெண் தான் உன் பையனுக்கு ஏற்ற பெண், இதை விட்டால் யாரும் கிடைக்க மாட்டார்கள் உடனே கல்யாணத்தை பண்ணி விடு என்று சொன்ன பிறகு தான் என் அப்பா எங்கள் காதலை ஓகே செய்தார். 

அடுத்து எங்களுக்கு திருமணம் நடந்து தற்போது அனைவரும் மிக நன்றாக இருக்கிறோம். ஒருவேளை எனக்கு நந்தனா கிடைக்கவில்லை என்றால் நான் மனம் உடைந்து போய் இருப்பேன் என ஓப்பனாக நடிகர் மனோஜ் பேசி இருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post