மணிவண்ணன் இறந்தது இப்படித்தான்..! அவருடைய சகோதரி வெளியிட்ட பகீர் தகவல்..!

 


2013 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இயக்குனர் மற்றும் நடிகரான மணிவண்ணன் இறந்த செய்தி திரை துறை வட்டாரங்களில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் இவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு வதந்திகள் பரவியது. 

இதனை அடுத்து தற்போது மணிவண்ணனின் இறப்பு குறித்த உண்மை நிலையை அவரது சகோதரி தெரிவித்து இருப்பது பலருக்கும் மன நிறைவை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் மணிவண்ணன் அளவுக்கு அதிகமாக குடித்ததின் காரணத்தால் இறந்து விட்டார் என்ற வதந்தியை கிளப்பியவர்களுக்கு தக்க பதிலடி தந்துள்ளது. 

பன்முகத்திறமையைக் கொண்ட மணிவண்ணன் 400 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருப்பதோடு 50 மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவரது நடிப்பில் துடுக்குத்தனமான நக்கலும், நையாண்டித்தனமும் கலந்து இருக்கும். 

மேலும் இவர் யாரைப் பற்றியும் எதற்காகவும் கவலைப்படாமல் மனதில் பட்டதை அப்படியே வசனங்களாக மாற்றி தெறிக்க விடுவது இவரது தனி திறமை எனக் கூறலாம். இவரது பேச்சில் மார்ச்சிய சித்தாந்தம், தமிழ் தேசியம், தமிழ் ஈழ அரசியல் போன்றவை கலந்து இருக்கும். 

நடிகர் சத்யராஜின் நண்பராக திகழ்ந்த மணிவண்ணன் ஆங்கிலத்தில் பட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டு இருந்தபோது ஷேக்ஸ்பியரின் பாடங்களை படிக்க கஷ்டமாக இருந்ததன் காரணத்தால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். 

அதன் பின் இவர் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தைப் பார்த்த பின்பு இவர் மனதில் அது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து 100 பக்கங்களுக்கும் அதிகமான கடிதம் ஒன்றை பாரதிராஜாவுக்கு எழுதினார். இதன் மூலம் இவர் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக மாறினார். 

கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படத்தில் பாரதிராஜா நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு உதவியாளராக சேர்ந்து அடுத்தடுத்து படங்களில் கதை, வசனம் போன்றவற்றை எழுதி இருக்கிறார். குறிப்பாக நிழல்கள், டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களுக்கு பாரதிராஜாவின் உதவியாளராக இவர் பணி புரிந்தார். 

மேலும் மணிவண்ணன் இயக்கிய 50 படங்களில் 34 படங்கள் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது. எனினும் இவரது நிஜ வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவும், கஷ்டங்களோடு இருந்தது. மிகச்சிறந்த மனிதரான மணிவண்ணன் இறப்பதற்கு முன்பே குடியை முழுமையாக நிறுத்தி விட்டதாகவும், அம்மா இறந்த தூக்கம் அண்ணன் மனதில் ஆழமாக இருந்ததாகவும் மணிவண்ணனின் சகோதரி கூறியிருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் அண்ணிக்கும் புற்றுநோய் இருந்தது. அதை யாரிடமும் வெளிப்படுத்தாமல் அந்த துக்கத்தையும் அண்ணன் தன் மனதில் போட்டு மறைத்து வைத்திருந்தார். இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு இன்டர்வியூ நடந்து கொண்டிருந்தது. அப்போது அண்ணன் கால் தடுமாறி கீழே விழுந்ததின் மூலம் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. 

இந்த சூழ்நிலையில் தான் அண்ணனுக்கு இறப்பு ஏற்பட்டது. அண்ணன் இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு அண்ணியும் இறந்து விட்டார், என்று தனது அண்ணனின் இறப்பு குறித்து தங்கை விளக்கம் தந்து குடியால் தான் மணிவண்ணன் இறந்தார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post