இப்படித்தான் படுக்கைக்கு அழைத்தார்கள்..! - கண்ணானே கண்ணே நிமேஷிகா ஓப்பன் டாக்..!



சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்ணான கண்ணே சீரியல் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழக இல்லத்தரசிகளின் வீடுகளில் ஒரு பெண்ணாகவே மாறியவர் தான் நிமேஷிகா ராதாகிருஷ்ணன். 

இந்த சீரியலில் இவர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்று கூறலாம். இவரது நடிப்பை பார்ப்பதற்கு என்றே ஒரு பேன் பேஸ் காத்துக் கொண்டு இருந்தது. 

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறிய கருத்துக்கள் அனைவரையும் ஷாக்காக வைத்தது. இதற்குக் காரணம் பட வாய்ப்புக்காக சில தவறாக அணுகியதை குறித்து தற்போது ஓப்பனாக பேசியிருக்கிறார். 

அந்த பேட்டியில் சீரியல்களில் அப்படி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். ஆனால் இந்த பிரச்சனை சினிமா மற்றும் வெப் சீரியல்களில் நடிக்கும் போது பலர் அதை நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். 

இதற்கு ஒரு உதாரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். அதில் தன்னிடம் ஒருவர் காஸ்டிங் கவுச்ஸ் என்று சொன்னார்கள். நானும் எதார்த்தமாக இது எனக்கு புரியவில்லை என்று அவரிடம் அது பற்றி வினவ நீங்கள் உங்களுடைய தோழிகள் அல்லது நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள் என்று சொல்லிவிட்டார். நானும் இது குறித்து என்னுடைய தோழிகளை அழைத்து கூறினேன். 

இது போல பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறுகிறார்கள் அதற்கு காஸ்டிங் கவுச்சிக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னார்கள் அதற்கு அர்த்தம் என்ன என்று வினவினேன். பட வாய்ப்பு தருவதற்காக அவர்கள் உன்னையே அவர்களுக்கு விருந்தாக கேட்கிறார்கள் என்று கூறினார்கள். 

எனக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது. உடனே மிகுந்த கோபம் ஏற்பட்டதால் அந்த இயக்கத்துக்கு போன் செய்து கண்டபடி கட்டித்தீர்த்தேன். எனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகள் முழுமையாக பயன்படுத்தி படு பயங்கரமாக திட்டி விட்டேன். 

அதுமட்டுமல்லாமல் படுக்கைக்கு அழைப்பதற்கு இப்படி ஒரு கோட்வேடா என்று நினைத்து மனதளவில் ரணமாகிவிட்டேன் என கண்ணான கண்ணே சீரியல் நிமேஷிகா எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தற்போது வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post