அட.. சூரியவம்சம் சின்ன பிரியாராமன் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

 


தமிழ் திரையுலகில் 1997 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கிய சூரிய வம்சம் திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா, பிரியா ராமன், மணிவண்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். 

குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பேமஸான ஒரு திரைப்படமாக மாறியதோடு வசூலையும் வாரி கொடுத்தது. இன்றும் இந்த படத்தை எவராலும் மறக்க முடியாது. 

மேலும் இந்த படத்தில் தேவயானி செய்த இட்லி உப்புமா இன்று வரை பேசும் பொருளாக உள்ளதோடு மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் எந்த பொருளையும் வீணாக்காமல் உடனடியாக செய்யக்கூடிய ஒரு அற்புதமான உணவாகவும் இந்த ரெசிபி உள்ளது என கூறலாம். 

இந்த படத்தில் இடம் பிடித்த ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடல்.. இன்றும் மக்களால் விரும்பப்படுகின்ற பாடல்களில் ஒன்றாக உள்ளது. மேலும் 90 கிட்ஸ் எப்போதும் மறக்காமல் சொல்லக்கூடிய படங்களில் இதுவும் ஒன்று என்று கூறலாம்.

தற்போது இந்தப் படத்தில் நடித்த நடிகை குறித்து ஒரு தகவல் வெளி வந்து ரசிகர்களின் மனதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் பிரியா ராமன் சரத்குமாரின் முறை பெண்ணாக நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 


அந்த வகையில் பிரியா ராமனின் சிறு வயது பெண்ணாக நடித்தவர் ஒரு சீரியல் நடிகை என்றால் உங்களுக்கு அது மேலும் வியப்பை ஏற்படுத்தும். அந்த சீரியல் நடிகை தான் பிரியா ராமனின் சிறு வயது கேரக்டர் ரோலை செய்திருப்பதை அவரே அவர் வாயால் கூறியிருக்கிறார். 

உங்களால் அந்த சீரியல் நடிகை யார் என்று யூகிக்க முடிகிறதா? இவர் 2013 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான செல்லக்கிளி என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். இதனை அடுத்து இவர் யாழினி மரகதவீணை என பல தொடர்களில் நடித்திருக்கிறார். 

ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் அவர் சீரியல் நடிகை நிவாசினி திவ்யாதான். இவர் சூரிய வம்சம் பாடலில் இவர் நடித்த காட்சி வரும் அதைப் பார்த்து இரு நான் தான் என்று கூறி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். இந்த வீடியோ தான் தற்போது ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்பட்டு, பகிரப்படும் வீடியோவாக உள்ளது. 

எப்படி இருந்த இவர் இப்போது எப்படி இருக்கிறார் என்பதை நீங்கள் வீடியோவில் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். நீங்கள் இந்த வீடியோவை பார்த்து விட்டு இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் அதற்கு உரிய லைக்கை போட்டு விட்டு வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான உங்கள் ஆதரவை கொடுங்கள்.

Post a Comment

Previous Post Next Post