பொது இடத்தில் முதலிரவு எப்போது என கேட்டாங்க..!! - நடிகை வித்யா பிரதீப் ஓப்பன் டாக்..!

 

உங்களுக்கு நடிகை வித்யா பிரதீப்பை ஞாபகத்தில் இருக்கிறதா? இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்தவர். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 

இவர் ஒரு மிகச்சிறந்த நடிகையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் மருத்துவராகவும் திகழ்கிறார். திரைப்படங்களோடு நின்றுவிடாமல் வெப் சீரியல்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் என படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர். 

அவ்வப்போது இணைய பக்கத்தில் பேட்டி அளிப்பார். அந்த வகையில் தற்போது அளித்து இருக்கக்கூடிய பேட்டி ஒன்றில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஆனது சீரியல் வாழ்க்கையில் உங்களது மறக்க முடியாத நிகழ்வு என்ன என்பதுதான். 

இந்த கேள்விக்கு அவர் பதில் அளித்த போது நிறைய அனுபவங்கள் உள்ளது என்றும், அதில் குறிப்பாக ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் என்று அந்த நிகழ்வை கூறியிருக்கிறார். 

நாயகி சீரியல் நடித்துக் கொண்டிருந்தபோது கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் திருமணம் தாமதம் ஆகிக்கொண்டே சென்றது. இதனை அடுத்து பொதுமக்கள் அனைவரும் திருவுக்கும் உங்களுக்கும் எப்போது திருமணம் என்று கேட்டு நக்கல் அடித்தார்கள். 

அதன்பின் நாயகி சீரியலில் அவர்களின் திருமணம் முடிந்த பிறகும் பொது மக்கள் அனைவரும் முதலிரவு எப்போது நடக்கும் என்று பொது இடத்தில் கேட்டது என்னால் மறக்க முடியவில்லை. இன்று வரை அது என் நினைவில் உள்ளது. 

மேலும் நாம் நடித்து முடித்துள்ள கதாபாத்திரம் மக்கள் மத்தியில் எந்த அளவு ஆளப் பதிந்துள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. இருந்தாலும் பொது இடத்தில் முதலிரவு பற்றி கேட்டது தான் என்னால் மறக்க முடியவில்லை என பதிவு செய்திருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post