மம்முட்டு குடும்பத்துடன் எனக்கு என்ன தொடர்ப்பு..! - சாக்ஷி அகர்வால் ஓப்பன் டாக்..!

 

தற்போது தமிழ் படங்களில் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை தன் கைவசம் வைத்திருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால், இந்த தீபாவளிக்கு பிறகு ஒரு பான் இந்திய நடிகையாக அவதாரம் எடுத்திருக்கிறார் என்று கூறலாம். 

ஆரம்ப காலத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல தரப்பு மக்களுக்கு அறிமுகமான சாக்ஷி அகர்வால், தமிழ் திரையுலகில் வித்தியாசமான கேரக்டர்களை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். 

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி திரைப்படங்களிலும் நடிக்க கூடிய வாய்ப்பு விரைவில் கிடைக்கும். இவர் திறமையை பல மொழி படங்களில் மிக நேர்த்தியான முறையில் வெளிபடுத்தி உள்ளார் என கூறலாம். 

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கிராமத்துப் பெண் வேடத்தை ஏற்று நடிக்க இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் கன்னட திரைப்பட துறையின் முன்னணி இசை அமைப்பாளரான பி.அஜெனீஷ் லோகநாத் தயாரிக்கும் புதிய படத்திலும் இவர் நடிக்க உள்ளார். மேலும் தமிழில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படமான சாராவில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். 


இந்த படத்தை ரஜித் கண்ணா இயக்க ஒரு திரில்லர் படமாக இது உருவாக்கி வருகிறது. பார்ப்பதற்கு படும் க்யூட்டான ஹீரோயினியாக வலம் வரும் சாக்ஷி அகர்வால் தற்போதும் மலையாள படத்தில் நடிக்கக்கூடிய காட்சிகள் இணையத்தில் வெளி வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதனை அடுத்து சில ரசிகர்கள் சாக்ஷி அகர்வாலுக்கும், மம்முட்டி குடும்பத்தாருக்கும் இப்படி ஒரு திரை பிணைப்பு ஏற்பட்டு உள்ளதா? என்று கேட்டு தொடர்ந்து பேசி வருகிறார்கள். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் வண்ணத்திரை பக்கத்தை லைக் செய்து இந்த பதிவை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Post a Comment

Previous Post Next Post