"கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இதை பண்ணா.. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.." - பாலிவுட் நடிகை பாயல் கோஷ்..!

 

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்தியாவிற்காக களம் இறங்கி பல விக்கெட்டுகளை வீழ்த்திய இவருக்கு தற்போது பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் வெளிப்படையாக தனது ப்ரபோஸ்சை கூறி அதற்குரிய நிபந்தனையையும் விதித்திருக்கிறார். 

இதற்கு காரணம் முகமது ஷமியின் முதல் மனைவி ஹாஸின் சமீபத்தில் அவர் சிறப்பான ஆட்டத்திற்கு வாழ்த்து கூற முடியாது. ஏனென்றால் நன்றாக ஆடினால் நிறைய பணம் கிடைக்கும். இந்திய அணி வெற்றி பெற மட்டுமே நான் வாழ்த்துக்களை கூறுகிறேன் என்ற கூறி இருந்தார். 

இந்த சூழ்நிலையில் பாலிவுட் நடிகை பாயல் கோஷ் தான் அவரை திருமணம் செய்து கொள்ள தயார் என்று அறிவித்திருக்கின்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 2023 உலகை உலகக் கோப்பை தொடரில் அசத்தியிருக்கும் முகமது ஷமி இந்த உலகக்கோப்பையில் ஆடியதின் மூலம் 14 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். 

மேலும் தற்போது நான்கு போட்டிகளில் 16 வித்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். இவரது வெற்றி இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்தாலும் இவரது சொந்த வாழ்க்கை மிகவும் சோகமானது. இவர் 2014ஆம் ஆண்டு ஹாஸின் என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2015ல் இவருக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறார். 

ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள பாலிவுட் நடிகை பாயல் கோஷ் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, இருப்பதோடு கிரிக்கெட் வீரர் நல்ல முறையில் ஆங்கிலத்தை பேசினால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதி அளித்து இருப்பதை பார்த்து இதை வேடிக்கையாக தான் கூறினாரா? அல்லது உண்மையாகவே வெளிப்படுத்தி இருக்கிறாரா? என்ற தகவல் தெரியாமல் பலரும் திண்டாடி வருகிறார்கள். 

அரசியலில் ஈடுபட்டு வரும் அந்த நடிகை ராம் தாஸ் அதவாலேவின் ரிபப்ளிகன் பார்ட்டி ஆப் இந்தியா என்ற கட்சியில் மகளிர் அணி துணை தலைவராக பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post