நடிகை ஹீராவுக்கு முன்பே அஜித் காதலித்த நடிகை..! - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க..!!

 

தமிழ் திரையுலகில் இன்று உச்சகட்ட அந்தஸ்தில் இருக்கும் தல அஜித் பற்றி அதிகமாக கூற வேண்டிய அவசியமே இல்லை. ஆரம்ப காலத்தில் இவர் எந்த ஒரு திரைதுறை பின்னணியும் இல்லாத காரணத்தால் திரை உலகில் தன்னை நிலை நிறுத்த பலவிதமான கஷ்டங்களையும், சங்கடங்களையும் அனுபவித்து இந்த அளவிற்கு உச்சம் தொட்டு இருக்கிறார் என்பது பாராட்டுதலுக்கு உரிய விஷயமாகும். 

இவர் தனது மனைவியான ஷாலினியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு தன்னுடன் திரைப்படத்தில் நடித்த ஹீராவை மனதார காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். எனினும் இவர்களது காதல் நிறைவேறவில்லை. 

தல அஜித் அஜித் ஹீராவை காதலிக்கும் முன்பாகவே தன்னுடன் நடித்த வேறொரு நடிகையை காதலித்து இருக்கிறார் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா? அட என்று நீங்கள் ஆச்சரியத்தோடு உங்கள் புருவங்களை உயர்த்தி யார் அவர்? என்ற கேள்வியை மனதுக்குள் எழுப்புவீர்கள். 

அந்த நடிகை வேறு யாருமில்லை நீங்கள் நன்கு அறிந்த நடிகை சுவாதி தான். நடிகை ஸ்வாதியும் அஜித்தோடு இணைந்து நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் அஜித், சுவாதியை காதலித்திருக்கிறார்.

இதனை அடுத்து தல அஜித் சுவாதியை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்க சென்றதாகவும், ஆனால் அப்படி பெண் கேட்க சென்ற சமயத்தில் நடிகை சுவாதியின் அம்மா தற்போது தான் தன் பெண் திரை உலகில் வளர்ந்து வருகிறார். எனவே தற்போது திருமணம் வேண்டாம் என்று மறுத்து விட்ட தகவலை நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பகிரங்கப்படுத்தி இருக்கிறார். 

இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. எனினும் இந்த காதல் விவகாரம் தான் தற்போது ட்ரெண்டிங்காக மாறிவிட்டது. அது மட்டுமல்லாமல் இரண்டு பெண்களை காதலித்து இவரது காதல் நிறைவேறாமல் கடைசியாக ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டாரா? என்பது போன்ற பேச்சுக்கள் தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 

உங்களுக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் நீங்கள் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து விட்டு, எங்களது வண்ணத்திரை பக்கத்திற்கும் லைக்குகளை வாரிக் கொடுங்கள்.

Post a Comment

Previous Post Next Post