மாமதுரை அன்னக்கொடி பாட்டுக்கு குலுங்க குலுங்க குத்தாட்டம்..! - நடிகை நிமிஷாவின் வைரலாகும் வீடியோ..!

 

தீபாவளி என்று திரைக்கு வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படமானது தீபாவளிக்கு வெளி வந்த திரைப்படங்களிலேயே மிகச் சிறப்பான திரைப்படமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டதோடு இந்த படத்தின் கதை அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்திருந்தது. 

மேலும் இத்திரைப்படமானது உலக அளவில் சுமார் 62 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது என்று கூறலாம். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா தங்களது அற்புத நடிப்புத் திறனை எதார்த்தமாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றார்கள். 

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நிமிஷா தமிழ் திரையுலகுக்கு புதிதானவர். எனினும் மலையாளத்தில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக இருப்பவர். இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். படம் முழுவதுமே பின்னணி இசை மற்றும் பாடல்கள் பட்டையை கிளப்பும்படி இருந்தது. 

குறிப்பாக இந்த படத்தில் இடம் பிடித்த மாமதுரை அன்னக்கொடி பாடல் பட்டி தொட்டி எங்கும் முணுமுணுக்கக் கூடிய பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது. மதுரை மண்ணின் எதார்த்தத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இந்த பாடல் வரிகள் இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். 

இதனை அடுத்து இந்த பாடலுக்கு நடனமாடிய ராகவா லாரன்ஸ் மிக அற்புதமாக தனது நடனத் திறமையை வெளிப்படுத்தினார். தற்போது அந்த பாடலுக்கான நடனத்தை நிமிஷா சூப்பராக ஆடி அதை வீடியோவாக மாற்றி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 


அட இவருக்குள் இவ்வளவு நடன திறமை இருக்கிறதா? என்று கேட்கக் கூடிய அளவு செமயா குத்தாட்டத்தை போட்டு இருக்கிறார். அதுவும் கிழித்துவிட்ட ஜீன்சை அணிந்து கொண்டு டீக்காக வெள்ளை சட்டையை போட்டு ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் என்று கூறலாம். 

அந்த அளவு இந்தப் பாடலுக்கு ஏற்றபடி நளினத்தோடு இவர் நடனம் ஆடி இருக்கிறார். இதனை பார்க்கும் போதே மனது முழுவதும் குற்றால சாரல் வீசுவதாக ரசிகர்கள் பலர் கூறி இருப்பதோடு அவர்களும் அந்த ஆட்டத்தில் சேர்ந்து ஆட ஆரம்பித்து விட்டார்கள். 

நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலை என்ன என்பது தெரிய வரும். அப்படி தெரிந்தால் அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப நீங்களும் ஆட ஆரம்பித்து விடுவீர்கள்.

Post a Comment

Previous Post Next Post