“விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்” - போட்டோ ஷூட்டில் ஸ்ரேயாவுக்கு உதவும் மகள்..!

 

ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த நடிகை தான் ஸ்ரேயா சரண். ரசிகர்களின் கனவு கன்னியாக ஒரு காலகட்டத்தில் ஸ்ரேயா சரண் திகழ்ந்த போது அவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் திரையுலகில் இருந்தது. 

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் சில கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையாக கன்னடத்தில் கப்ஜா என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்தார். மேலும் ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்திருக்க கூடிய இவர் மியூசிக் ஸ்கூல் என்ற இந்தி படத்தில் அபாரமாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார். 

 இதனை அடுத்து திரையுலகில் இருந்து திடீர் என விலகியை இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ கோச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எனினும் இவருக்கு இன்னும் சினிமா மோகம் தீரவில்லை. எனவே தான் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார். 


அந்த வகையில் தற்போது நடத்தி இருக்கும் போட்டோ ஷூட்டில் தனது மூன்று வயது மகள் தனது அம்மாவிற்கு கண்ணாடியை பிடித்துக்கொண்டு நிற்கும் காட்சி வைரலாக பரவி வருகிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல இந்த குழந்தையின் செயல் தற்போது உள்ளது என கூறலாம். 

இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பாப்பா பார்ப்பதற்கு படு கியூட்டாக உள்ளது என கூறியிருக்கிறார்கள். மேலும் ரசிகர்கள் அனைவரும் விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா? முளைக்கும். நாளைய ஹீரோயினி நேற்றைய ஹீரோயினிக்கு மேக்கப்புக்கு உதவி செய்கிறார் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள். 


நீங்களும் இந்தப் புகைப்படக் காட்சியை பார்த்தால் கட்டாயம் லைக்  போடாமல் செல்ல மாட்டீர்கள். அந்த அளவு குழந்தையின் அழகு மற்றும் அதனுடைய செயல் உள்ளது என கூறலாம்.

Post a Comment

Previous Post Next Post