“தல அஜித்தால் விரட்டப்பட்ட விக்னேஷ் சிவன்..!” - வாழ்வு கொடுத்த விஜய் பட தயாரிப்பாளர்..!

 

போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கும் போது நயன்தாராவுடன் காதல் மலர்ந்து. தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டு இரட்டைப் பிள்ளைக்கு பெற்றோர்களாக திகழ்கிறார்கள். 

இந்த சூழ்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படம் சரியாக மக்கள் மத்தியில் சேரவில்லை. இதனை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதி நயன்தாரா கூட்டணியில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் கூடுதலாக சமந்தாவும் இணைந்து நடித்திருந்தார். 

இதனை அடுத்து நடிகர் ஆஜித்குமாரின் 62 ஆவது படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. ஆனால் அஜித் விரும்பக்கூடிய அளவு கதையை விக்னேஷ் சிவன் உருவாக்காத நிலையில் அதிரடியாக விக்னேஷ் சிவனை அஜீத் அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டார். 

இதனால் கடுமையான மன வருத்தத்தில் இருந்த விக்னேஷ் சிவனுக்கு தற்போது விஜயின் லியோ படத்தை தயாரித்த 7 கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் புதிய படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பை தயாரிப்பாளர் லலித்குமார் கொடுத்திருக்கிறார். 

இந்த படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டது. அஜித்தால் தூக்கி எறியப்பட்ட விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐசி படத்தின் மூலம் தான் எவ்வளவு பெரிய ஹார்ட் என்பதை நிரூபிக்க காத்திருக்கிறார். விஜய் சொல்லி தான் இந்த வாய்ப்பு தற்போது விக்னேஷ் சிவனுக்கு கிடைத்துள்ளது. 

எனவே இந்தப் படம் வெற்றி அடைந்தால் இதனை தொடர்ந்து தளபதி விஜயை இயக்கக்கூடிய வாய்ப்பு கட்டாயம் விக்னேஷ் சிவனுக்கு கிடைக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

இந்தப் பதிவை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Post a Comment

Previous Post Next Post