அச்சச்சோ என்ன ஆச்சு? விரல் உடைந்த நிலையில் KPY பாலா வெளியிட்ட போட்டோ..

 

விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பாலா கட்டாயம் இடம் பிடிப்பார். இவர் இல்லாத நிகழ்ச்சிகளை இல்லை என்று சொல்லக்கூடிய அளவு தற்போது இவர் விஜய் டிவி முழுவதும் நிறைந்திருக்கிறார். 

இதற்கு காரணம் தக்க நேரத்தில் தனது காமெடிகளை எதார்த்தமாக வெளியிடுவதின் மூலம் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்து விட்டார். விஜய் டிவி மட்டுமல்லாமல் பல தனியார் டிவிகள் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார். 

அதுமட்டுமல்லாமல் தான் சம்பாதித்த பெரும்பாலான பணத்தை இயலாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்து வருவதில் மிகச்சிறந்த மனிதராக விளங்குகிறார். 

சில நாட்களுக்கு முன்பு கூட ஈரோடு மாவட்டம் கடம்புறை அடுத்த 18 மலை கிராமத்தில் சுமார் 8000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு மருத்துவ உதவிக்காக 5 லட்சம் மதிப்புடைய இலவச ஆம்புலன்சை வழங்கி இருந்தார். 

இதற்காக இவர் தனது சொந்த பணத்தை கொடுத்திருந்ததை அறிந்து பலரும் பாலாவின் செயலை பாராட்டினார்கள். அது போல சென்னையில் அண்மையில் தாக்கிய புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் 200 குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்திருக்கிறார். 

மிகப்பெரிய நடிகர்களை உதவி செய்ய முன் வராத நிலையில் கே பி ஒய் பாலா செய்துள்ள இந்த உதவியை பலரும் பல வகைகளில் பாராட்டி இருக்கிறார்கள். 


இதனிடையே தற்போது பாலா தனது விரல்கள் உடைந்து விட்டதாக சொல்லி கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அதில் மனசு நிறைந்தது விரல் உடைந்தது நன்றி என கூறி இருக்கிறார். 

இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் விரைவில் அவர் குணமாக இறைவனை வேண்டுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post