பீரியட்ஸ் நேரத்தில் இதை பண்ணுங்க..! - நயன்தாரா வெளியிட்ட வைரல் புகைப்படம்..!

 

தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகின்ற நயந்தாரா, சினிமா துறையில் நடிப்பதோடு நின்று விடாமல் பல்வேறு வகையான தொழில்களை நடத்தி வருவது அனைவருக்கும் நன்றாக தெரியும். 

திரைத்துறையில் நடித்த காலத்தில் பல்வேறு வகையான விமர்சனங்களை சந்தித்த இவர் எதையும் கண்டு அஞ்சாமல் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவனை காதலித்தவர் அவரையே திருமணம் செய்து கொண்டு வாடகை தாயின் மூலம் இரண்டு மகன்களை பெற்றுக் கொண்டார். 


நயன்தாராவின் எல்லா பணிகளுக்கும் விக்னேஷ் சிவன் முழு சப்போர்ட் அளித்து வருவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். மேலும் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கும் இவர் சஞ்சய் லீலா பஞ்சாலி என்ற இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ரன்வீர் சிங் நடிக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இவர் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கி இருப்பதாக Instagram பக்கத்தில் மூலம் விவரங்களை தெரிவித்திருக்கிறார். 

சினிமாவில் பிஸியாக இருக்கும் நயன்தாரா தற்போது பிசினஸிலும் செம பிஸியாக இருக்கிறார் என கூறலாம். அந்த வகையில் புதிய தொழிலை ஆரம்பித்து இருக்கக்கூடிய நயன்தாரா Femi 9 என்ற சானிட்டரி நாப்கின் பிராண்டை உற்பத்தி செய்யும் தொழிலை துவங்கி இருக்கிறார். 


இதனை அடுத்து தனது Instagram பக்கத்தில் இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான அடையாளம். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த முயற்சியை என்னோடு கொண்டாட இணையுங்கள். ஒருவரை ஒருவர் ஆதரிப்போம் இணைந்து உயர்வோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

முன்னதாக 9 ஸ்கின் லிப்பாம் கம்பெனியை ஆரம்பித்த இவர் மீண்டும் பெண்களுக்கு உதவக் கூடிய சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்யும் தொழிலையும் ஆரம்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த நாப்கினை பீரியட் டைமில் பெண்கள் பயன்படுத்தி அதிக நன்மைகளை பெற முடியும் என்பது போல அவரது பதிவு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post