எதிர்நீச்சல் ஆதி குணசேகரனுக்கு வைக்கப்பட்ட சிலை.. நெகிழ்ச்சியில் சின்னத்திரை..

 

எதிர்நீச்சல் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பெருத்து ஆதரவை பெற்ற மாரிமுத்து பற்றி சில விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் பெரிதாக எதையாவது செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தேனி மாவட்டத்தில் இருந்து 25 வருடங்களுக்கு முன்பு சென்னை நோக்கி வந்தவர் மாரிமுத்து. 

ஆரம்ப காலத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த இவர் பின்னர் இயக்குனராக சில படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய அந்த படங்கள் சரியாக ரசிகர்கள் மத்தியில் போய் சேரவில்லை. 

அதன் பிறகு நடிப்பில் இறங்கிய இவருக்கு ஜாக்பாட் ஆக அமைந்தது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியலில் இவர் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரை செய்து வில்லன் கேரக்டர்களையே வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றார். 

இதனை அடுத்து வெள்ளி திரையில் இவருக்கு ஜெயிலர், இந்தியன் 2, கங்குவா போன்ற பெரிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஜெயிலர் பட வெற்றியை கொண்டாடி வந்த மாரிமுத்து கடந்த எட்டாம் தேதி மார் அடைப்பால் உயிர் இழந்ததை அடுத்து எதிர்நீச்சல் சீரியல் ஒரு மிகப்பெரிய நடிகரை இழந்தது. 


இந்நிலையில் தற்போது விழுப்புரம் நகரில் மாரிமுத்துவிற்கு சிலை அமைத்து உள்ள செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. நடிகர் மாரிமுத்து மட்டுமல்லாமல் பிரதமர் மோடியின் தாயாரான ஹீராபென் மோடிக்கும் சிலை வைத்திருக்கிறார்கள். அவை தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post