"போட்ரா வெடிய..” - முன்னணி தமிழ் இயக்குனர் படத்தில் KGF ஹீரோயின்..!

 

கிச்சா சுதீப் ஒரு சிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், கிரிப் ரைட்டர், பாடகர் என பன்முகத் திறமையை தன்னுள் கொண்டிருப்பவர் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். 

இவர் கன்னடத்தில் முன்னணி நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல வெற்றி படங்களையும் தந்தவர். தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர், தமிழில் வெளி வந்த நான் ஈ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

 இதனை அடுத்து இவர் தமிழில் நேரடியாக நடிக்க கூடிய படம் தற்போது சுதீப் மற்றும் சேரன் கூட்டணியில் உருவாக உள்ளது. தமிழில் நடிகை சமந்தா மற்றும் நாணியுடன் கிச்சா சுதீப் இணைந்து நடித்திருந்த நான் ஈ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை சுதீப்புக்கு பெற்று தந்தது. தன்னிடத்தில் அடுத்தடுத்து வெற்றி படங்களை தரக்கூடிய சுதீப் இயக்குனர் சேரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக்க உள்ளார்கள். புதிய படத்தில் கிச்சா சுதீப் முக்கிய கேரக்டரில் நடிக்க இயக்குனர் சேரன் டைரக்ட் செய்ய உள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளது. இந்தப் படத்திற்கு கிச்சா 47 என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில் படத்தின் கதாநாயகியாக ஸ்ரீ நிதி ஷெட்டி இணைந்திருக்கிறார். 

இது குறித்த முக்கிய தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். 

இந்த செய்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. ஸ்ரீநிதி ஷெட்டிக்கு, இந்த திரைப்படம் ஒரு மிகச்சிறந்த திருப்புமுனையை ஏற்படுத்தி முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற்றக்கூடிய வாய்ப்பை தரும் என ரசிகர்கள் அனைவரும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். 

இந்தப் படம் இவருக்கு வெற்றி திரைப்படமாக அமையட்டும். மென்மேலும் பட வாய்ப்புகள் வந்து சேர வண்ணத்திரை சார்பாக நாம் அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post