லியோ Vs ஜெயிலர் வசூல் வேட்டை..! யாரு கழுகு..? யாரு காக்கா

 

தற்போது தளபதி விஜய் நடித்திருக்க கூடிய லியோ திரைப்படம் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் ஜெய்லர் திரைப்படத்தை விட அதிக அளவு வசூலை பெற்றதா? என்பதை பற்றிய விரிவான தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

மேலும் தெய்வத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் ரஜினிகாந்த் பேசிய கழுகு காக்கா குறித்த விமர்சனம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இதற்குக் காரணம் ஜெய்லர் திரைப்படம் அதிக வசூலை செய்ததா? அல்லது லியோ படம் செய்ததா? என்ற சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி உள்ளது என கூறலாம்.

இந்த விஷயமானது ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களின் மோதலுக்கு காரணமாக அமைந்துள்ளது எனவே இரு தரப்பினரும் மாறி மாறி மீம்ஸ் மூலம் தங்களது பலத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் நடித்த லியோ திரைப்படமானது உலகம் முழுவதும் வெளியானது. 

இதில் தமிழ்நாட்டில் சுமார் 900 திரையரங்குகளில் மாபெரும் எதிர்பார்ப்பில் இந்த படம் திரையிடப்பட்டது. அடுத்து லியோ திரைப்படத்திற்கும் ஜெய்லர் படத்திற்கு இணையாக திரையரங்குகள் எங்கும் கூட்டம் நிலவியது. 

முதல் நாள் வசூல் யார் கழுகு? யார் காக்கா? என்பதே ரசிகர்களின் பேச்சாக தற்போது உள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் லியோனி திரைப்படமானது சுமார் 80 கோடி வசூலை ஈட்டி இருக்கும் என துறை வட்டாரங்கள் கூறிவரும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 30 கோடி வசூலை தாண்டி இருக்கலாம் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. 

இதனை அடுத்து உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் சுமார் 148 கோடியே 50 லட்சத்தை தாண்டி லியோ வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வசூல் ஆனது ஜவான் மற்றும் ரயிலர் படங்களின் வசூலை முறியடித்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள  
வேளையில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் முதல் நாளில் 129 கோடியையும் 

ஒட்டுமொத்தமாக 1140 கோடியையும் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இதுபோலவே ஜெய்லர் திரைப்படம் முதல் நாளில் சுமார் 88 கோடியை வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், முதல் நாளில் தமிழ்நாட்டில் 25 கோடியை எட்டியுள்ளது. 

எனவே லியோ படமானது ரஜினியின் ஜெயிலர் படத்தோடு ஒப்பீடு செய்யும் போது இதன் கை ஓங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே இப்போது உங்களுக்கு யார் கழுகு என்பதை எளிதில் தீர்மானிக்க விடலாம்.

Post a Comment

Previous Post Next Post