“விசித்ராவுக்கு எல்லாம் பரவாயில்லை எனக்கு நடந்தது படுமோசம்..!” - காதல் பட நடிகையின் பகீர் குற்றச்சாட்டு..!

 


சமூக ஊடகங்களில் எந்த பக்கத்தை தொட்டாலும் அதிக அளவு அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய விவகாரங்கள் அதிக அளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதுவும் திரை உலகில் நிகழக்கூடிய இந்த நிகழ்வுகளுக்கு யாரால் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற கேட்கக் கூடிய அளவிற்கு  அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் குறித்த செய்திகள் விஸ்வரூப வளர்ச்சியை எட்டியுள்ளது. 

அதிலும் தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் மறக்க முடியாத டாஸ்க்கில் விசித்ரா தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்களை பலர் மத்தியிலும் கூறி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார். மக்களால் மதிக்கப்படக்கூடிய மிகப்பெரிய நடிகர்கள், நடிகைகளை ரூமுக்கு அழைத்த விவகாரங்கள் தற்போது பேசும் பொருளாகி விட்டது. 

அந்த விவகாரத்தில் தன்னை காப்பாற்ற தனது கணவர் தினமும் ஒவ்வொரு அறையை மாற்றி கொடுத்தார். இது நிமித்தமாக புகார் கொடுத்தும் பலனில்லை என்று கூறியது பலரையும் யோசிக்க வைத்துள்ளது. மேலும் இந்த காரணத்தால் தான் சினிமாவில் இருந்து விலகி விட்டதாகவும் அவர் கூறிய கருத்து கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இவரை அடுத்து தற்போது காதல் படத்தில் தோழியாக நடித்த சரண்யா தனக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்த அது போன்ற சம்பவத்தை பேசியிருக்கிறார். மேலும் அவர் அந்தப் பேட்டியில் விசித்ரா சொன்னது போல திரைத்துறையில் நிறைய விஷயங்கள் பலருக்கும் தெரியாமல் நடந்து வருகிறது. பலருக்கு தெரிந்திருந்தாலும் தெரியாதது போல் நடக்கிறார்கள். 

எனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யச் சொல்லி பல பிரச்சனைகள் வந்துள்ளது. சிறிய நடிகைகள் இது குறித்து பேசினாலும் அந்தப் பிரச்சனையை வெளியே சொன்னாலும் அதை பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே இது போன்ற மோசமான அனுபவங்களை பகிர பலரும் தயங்கி வருகிறார்கள். 

அதுமட்டுமல்லாமல் இது போல நடக்கும் என்று தெரிந்து தானே உள்ளே வந்தீர்கள் என்று நக்கலாக பேசுபவர்களும் இருப்பதாக கூறி இருக்கிறார். திரைதுறை மட்டுமல்லாமல் பெண்கள் வேலை செய்யும் எல்லா துறைகளிலும் இதுபோல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. 

எனினும் திரை துறையில் இது சற்று கூடுதலாக உள்ளதாக தெரிவித்த அவர், பேராண்மை படத்தில் நடித்த போது தான் மிகவும் சிறப்பாக இருப்பதாக ஃபீல் பண்ணியதாகவும், அதே சமயம் காதல் படத்தில் நடிக்கும் போது இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால் பெருமளவு பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் விசித்திரா அக்காவுக்கு நடந்ததை விட என்னுடைய விஷயம் மிகவும் கொடுமையானது என்று கூறியிருப்பது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post