பொம்பள கையாள செருப்பால் அடி வாங்கிய தருணம்..! நடிகர் இளவரசு ஓப்பன் டாக்..!

 


தீபாவளி அன்று திரைக்கு வந்த படங்களில் வித்தியாசமான கதையாம்சத்தோடு 70-களில் நிகழ்ந்த கதையை நேர்த்தியான முறையில் படம் எடுத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு இருக்கக்கூடிய திரைப்படம் தான் சிறப்பாக ஓடி மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் முத்துக்கு முத்தாக, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் இளவரசு மிகச் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார். 

இந்தப் படத்தில் இவர் "தட்ஸ் மை பாய்" என்று பேசக்கூடிய வசனம் 2கே கிட்ஸ் மத்தியில் பரவலாக பரவி ஒரு முக்கிய வசனமாக இடம் பிடித்து விட்டது. வித்தியாசமான கதை களத்தில் வெற்றி பெற்றிருக்கும் இந்த படத்தில் இளவரசுவை முதல் அமைச்சராக நடித்த பெண் ஒருவர் செருப்பால் அடிப்பது போல சீன் உள்ளது. 

இதனைப் பற்றிய செய்தியாளர்கள் ஒரு பெண்ணின் கையால் செருப்படி வாங்குவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க ,அதற்கு இளவரசு படத்திற்கு தேவை என்றால் நடித்துதான் ஆக வேண்டும். இது கலை அவர் என்னை உண்மையாகவே அடிக்கவில்லை என்று எதார்த்தமான உண்மையைத் தெளிவாக கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து இந்த படத்தில் இவரது நடிப்பு எதார்த்தமாக பலரையும் கவரும் வண்ணம் இருந்ததாக இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் நடிக்க என்று வந்துவிட்டால் அதற்காக நாம் பல தியாகங்களையும் செய்ய வேண்டும். 

இந்த தொழிலில் சுய கௌரவம் பார்த்தால் வேலைக்காகாது என்ற கருத்தை மிக நேர்த்தியான முறையில் இளவரசு வெளிப்படுத்தியதை அடுத்து அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்தை லைக் செய்து உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.

Post a Comment

Previous Post Next Post