பொண்ணுங்களுக்கு வரக்கூடிய பிரச்சனையை ஈஸியான தீர்வு இது..! சீரியல் நடிகை ஸ்யாமந்தா.!

 

பொதுவாக பெண்கள் அனைவரும் முக அழகில் அதிக அளவு ஆர்வத்தை காட்டுவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இதற்காக பல பேஸ் பேக்குகளை அவர்கள் பயன்படுத்துவார்கள். 

மேலும் அழகு நிலையங்களுக்குச் சென்று தங்கள் முக அழகை பராமரித்து வரும் பெண்களுக்கு இந்தப் பிரச்சனைக்கு தீர்வு ஏதும் கிடைக்காது. அது என்ன பிரச்சனை தெரியுமா? இயல்பாகவே பெண்களின் கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையம் தான் அந்த பிரச்சினை. 

இந்த கருவளையத்தை மிக எளிமையான முறையில் நீக்கக்கூடிய தீர்வினை சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான நடிகையாக திகழும் ஸ்யமந்தா கிரண் கூறியிருக்கிறார். 

இவர் சரவணன் மீனாட்சி 3, தாமரை, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி போன்ற பிரபல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவருக்கும் கண்களின் கீழ் கருவளைய பிரச்சனை இருந்துள்ளது. 

இதனை அடுத்து பல கிரீம்களை பயன்படுத்தியும் இவருக்கு ரிசல்ட் கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சனைக்காக இவர் ஒரு மருத்துவரை அணுகிய போது கண்ணில் கருவளையம் ஏற்படுவதற்கான காரணமே, கண்ணுக்கும் கன்னத்திற்கும் இடையே ஒரு சிறு பள்ளம் இருப்பதால், அந்த பள்ளத்தில் விழக்கூடிய நிழலால் அந்த இடம் கருப்பாக தோன்றுகிறது என்று கூறி இருக்கிறார். 

மேலும் அந்த பள்ளமான பகுதியை ஃபிள்ளர்ஸ் என கூறுவதால் அந்தப் பகுதியை மேடாக்கிவிட்டால் கண்ணம் ஒன்று போல் ஆகிவிடும் என தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து அது சரியானது என்பதை உணர்ந்து கொண்ட இவர் அந்த சிகிச்சையை மேற்கொண்டவர்களிடம் அதைப் பற்றி கேட்டு அறிந்து கொண்டாராம். 

பின்னர் அதற்கு உரிய வழிமுறைகளை ஃபாலோ செய்ததை அடுத்து அவரது கருவளையம் மறைந்து விட்டது. இதனைத் தான் தற்போது மற்றவர்களிடம் இப்படி செய்ய சொல்கிறேன் என்று அர்த்தம் கிடையாது. நான் என்ன செய்தேன் என்பதைத்தான் விளக்கமாக தெரிவித்து இருக்கிறேன் என சீரியல் நடிகை ஸ்யமந்தா கிரண் கூறியிருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post