வனிதா தாக்குதல்.. பாடகி சுசித்ரா வெளியிட்ட பரபரப்பு தகவல்..! - விளாசும் ரசிகர்கள்..!

 

பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார் அண்மையில் தாக்கப்பட்ட விஷயத்தில் உண்மை என்ன என்பது இதுவரை எவருக்கும் தெரியவில்லை என்று பாடகி சுசித்ரா கருத்துகளை தெரிவித்திருக்கிறார். 

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா கலந்து கொண்டு உள்ள நிலையில் தனது மகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசி வரும் வனிதா விஜயகுமார் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்களை You tube தளங்களிலும் பேசி வருகிறார். 

இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் நள்ளிரவு வேளையில் அடையாளம் தெரியாத நபர் தன்னை மர்மமாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் ரெட் கார்ட் கொடுக்கறீங்களா? என்று கேட்டதாகவும், அந்த நபரின் சிரிப்பு இன்னும் தன் காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பதாகவும் கூறிய வனிதா தன்னை தாக்கிய பின்பு எடுத்த போட்டோவை வெளியிட்டு இருந்தார். 

இந்த நிகழ்வு குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் நள்ளிரவில் பிரதீப்பின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக கூறிய வனிதா, அவர் கன்னம் வீங்கும் அளவிற்கு தாக்கிய நபரை பற்றி ஏன் போலீசில் புகார் கொடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். 

வனிதா விஜயகுமார் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு போன் செய்த போது போன் சுவிட்ச் ஆப்பில் வைக்கப்பட்டு இருந்ததாக அதற்கான பதிலை வனிதா தெரிவித்திருந்தாலும், இது குறித்து பேசிய பாடகி சுசித்ரா வனிதா தாக்கப்பட்ட விஷயத்தில் பல தலைகள் உருளுவதாகவும், பலர் மேல் சந்தேகங்கள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது என்ற கருத்தை கூறி பிரளயத்தை ஏற்படுத்தி விட்டார். 

இதனை அடுத்து காவல்துறை மற்ற வேலைகளை எல்லாம் விட்டு விட்டு இந்த வேலையில் தான் முழுமூச்சாக செயல்படுகிறார்கள். எனவே வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டது உண்மையா? என பலரும் கேட்டு அவருக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து வருவதாக கூறியிருக்கிறார். 

இந்த சம்பவத்திற்கு பிறகு வனிதா எப்படி இருக்கிறார், எங்கு இருக்கிறார் என்ற விஷயம் எவருக்கும் தெரியவில்லை. எனவே வனிதா உடனடியாக இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாடகி சுசித்ரா பேசி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

Post a Comment

Previous Post Next Post