"ஒரே நாள் தான் ரஜினியை கைக்குள் போட்ட லதா..!" - எப்படி தெரியுமா..?

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தமிழ் திரை உலக ஆட்சி செய்து வரும் ரஜினிகாந்த் தன் காதலியை ஒரே நாளில் பார்த்து முடிவெடுத்து காதலித்திருக்கிறார் என்ற சுவாரஸ்யமான விஷயத்தை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். 

சூப்பர் ஸ்டார் தனது ஆரம்ப காலத்தில் பெங்களூருவில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்த போது மருத்துவ மாணவி நிர்மலா என்ற பெண்ணை விரும்புகிறார். இருவரும் காதலித்து வரும் வேளையில் தான் அவரை நடிக்க அந்தப் பெண் ஊக்கப்படுத்துகிறார். 

 காலத்தின் கோலம் இவருக்கு திரைப்பட நிறுவனத்தில் நடிப்புக் கல்வியை கற்க கதவு திறந்த போது அந்த காதல் நழுவி விட்டது. இதனை அடுத்து தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத நடிகராக உருவெடுத்த பிறகு இவர் பெயரில் பற்பல கிசுகிசுக்கள் எழுந்தது. 

எனினும் எந்த ஒரு நடிகையும் திருமணம் செய்து கொள்ளாத இவர் எத்திராஜ் மகளிர் கல்லூரி மாணவியான லதா ரங்காச்சாரியாரை திருமணம் செய்தார். இவர்களது திருமணம் 26 பிப்ரவரி 1981 இல் நடந்தது. அறிமுகம் இல்லாத இந்த பெண்ணை எப்படி இவர் காதலித்து மணந்தார் என்பது சுவாரஸ்யமான விஷயம் ஆகும். 

இவர் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த முரட்டுக்காளை படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அவருடன் இணைந்து மகேந்திரனும் நடித்திருக்கிறார். இருவரும் மிக சிறப்பான முறையில் நட்போடு இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் கல்லூரி இதழுக்காக மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா ரஜினியை பேட்டி காண விரும்புகிறார். 

அந்த சமயத்தில்தான் தில்லுமுல்லு படப்பிடிப்புக்கு மகேந்திரன் அழைத்துச் சென்றார். முதல் முறையாக லதாவைப் பார்த்த ரஜினி அப்போதே இவர்தான் மனைவி என்று முடிவு செய்து விட்டாராம். அதுமட்டுமல்லாமல் மறுநாளே மகேந்திரனுக்கு போன் செய்து லதாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து மகேந்திரன் அவர்கள் உங்களை விட வயது மூத்தவர் என்று கூறியிருக்கிறார்.ரஜினி நான் விரும்புவது உன் மைத்துனி லதாவை என்று கூற மகேந்திரன் என்னையா உண்மையாகவா? என்று சிரித்தபடி சந்தோஷப்பட்டு இருக்கிறார். இதனை அடுத்து இரு விட்டாரும் பேசி முடி உயர்ந்த திருமணத்தை முடித்து வைத்திருக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post