இரண்டாவது கணவருடன் VJ ரம்யா..? - யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்டுடும்..!

 

விஜய் தொலைக்காட்சியில் வரிசை கட்டி நிற்கும் விஜேக்களில் திறமை வாய்ந்த ரசிகர்கள் விரும்பும் விஜேவாக இருப்பவர் ரம்யா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் களைக்கட்டும் விதத்தில் அமைந்து இருப்பதால் இவருக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரம் உள்ளது என்று கூறலாம். 

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கக்கூடிய இவர், திரைப்படங்களிலும் சின்ன, சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். 

அந்த வகையில் இவர் மொழி, ஒரு காதல் கண்மணி, மாசு என்கின்ற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றார். இந்நிலையில் இவருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது போல இணையதளத்தில் பரபரப்பான போட்டோஸ் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியது. 

இதற்கு காரணம் என்னவென்று பார்க்கையில் Instagram பக்கத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக்கின் புகைப்படத்தின் அருகில் தொகுப்பாளினி ரம்யா நின்றபடி காட்சி அளித்திருக்கிறார். 

 மேலும் இந்தப் புகைப்படத்திற்கு மேல் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் இரண்டாவது மனைவி என்று தவறுதலாக கேப்சன் கொடுத்திருக்கிறார்கள். இந்த போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 




பின்னர் இது தவறான செய்தி என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இப்படியா? போட்டோசை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக வைப்பீர்கள் என்பது போன்ற பல கேள்விகளை விடுத்திருக்கிறார்கள். 

ஆனால் எந்த புகைப்படத்தை பார்த்தால் ஒரு நிமிடம் எவரும் தடுமாறி விடுவார்கள் என்று தான் கூற வேண்டும். அதற்கு சான்றாக கொடுத்திருக்கும் தலைப்பும் இருப்பதால் அனைவருக்கும் தடுமாற்றம் ஏற்படுவது இயல்புதான். 

மேலும் 2015 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக் தீபிகா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட விஷயம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த புகைப்படம் 2013இல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

உங்களுக்கும் இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான லைக்குகளை கொடுங்கள். நண்பர்களுக்கும் ஷேர் செய்து எங்கள் பக்கத்திற்கு ஆதரவை தாருங்கள்.

Post a Comment

Previous Post Next Post