“அவனை என்னால் மறக்கவே முடியவில்லை.. தினமும் நினைத்து நினைத்து அழுகிறேன்” - ஸ்ரீதேவி அசோக்.!!

 

சின்னத்திரை சீரியல் நடிகையான ஸ்ரீதேவி அசோக் ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு, இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையாததின் காரணத்தால் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் தங்கம், கஸ்தூரி போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போதே நல்ல பெயர் கிடைத்ததோடு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கும் ஏற்பட்டது. 

இதனை அடுத்து நெகட்டிவ் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரிக்க தன்னுடைய நண்பனான அசோக் சிண்டலாவை திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் வீட்டுக்கு திரும்பி செல்லும் போது சாலை ஓரத்தில் நாய் ஒன்றை கண்டெடுத்திருக்கிறார்கள். இந்த நாய்க்கு தகுந்த சிகிச்சை அளித்து அவர்களுடன் வளர்த்து வந்திருக்கிறார்கள். 

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அந்த நாய்க்குட்டி இவர்களோடு நல்ல ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வந்துள்ளது. இதனை அடுத்து திடீரென ஒரு நாள் இறந்து போய்விட்டது. இதன் இறப்புக்கு காரணம் சிறுநீரகப் பிரச்சனை என தெரிய வந்ததாம். 

மேலும் அந்த வளர்ப்பு பிராணி அவர்களை விட்டு பிரிந்ததை அடுத்து அதனுடைய நினைவுகளை நினைத்து அழாத நாளே கிடையாது என்று கண்ணீர் மல்க ஸ்ரீதேவி அசோக் தெரிவித்திருக்கிறார். 

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட இவரது ரசிகர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு இவரை சமாதானம் செய்யக்கூடிய வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மேலும் இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விட்டது.

Post a Comment

Previous Post Next Post